இஸ்லாத்தின் மீது பெரும் அவதூறைச் சுமத்தியதற்காகபிபிஸிநிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. அத்துடன் தனதுதவறுக்குவருந்தி, தான் அவதூறு பரப்பிய பிரிட்டனிலுள்ளமுஸ்லிம்பேரவையின் (Muslim council of Britain) தலைவரானடாக்டர். முஹம்மத் அப்துல் பாரி அவர்களுக்கு 45,000பிரிட்டிஷ்பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்குகிறது.பிபிஸியின் "கேள்வி நேரம்" நிகழ்ச்சி ஒன்றின் போதுபிரிட்டிஷ்படை வீரர்களைக் கடத்திக் கொலை செய்வது பற்றியஒருவாதத்தில் அவதூறான சில கருத்துக்களை பிபிஸி நடுவர்குழுதெரிவித்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்தமுஹம்மத்அப்துல் பாரி அவர்கள் இச்செயலை முழு மனதுடன்ஆதரித்துப்பேசினார் என இந்நிகழ்ச்சியை நடத்தும் நடுவர் குழுபழிசுமத்தியது.
இது முற்றிலும் பொய்யான அவதூறாகும் என்றுமுஹம்மத்அப்துல் பாரி இதனை எதிர்த்துத் குரல் எழுப்பினார்.தான் கூறாதஒரு கருத்தைத் தான் கூறியதாகவும் அதுவேஇஸ்லாத்தின்நிலைபாடாகவும் பொய்யான செய்தி வெளியிட்டபிபிஸிக்குஎதிராக வழக்குத் தொடர்ந்தார். கடந்த 2007 இல்ஈராக்கில்பிரிட்டிஷ் படைவீரர்கள் கொல்லப் பட்டதை எதிர்த்துதான்பேசியதாகவும், அதனை பிபிஸி நடுவர்கள் குழுதிரித்துஅவர்கள் கொல்லப்படுவதைத் தான் ஆதரித்துப்பேசியதுபோன்று தம் மீதும் தூய இஸ்லாமிய நெறிகள் மீதும்பிபிஸி பழிசுமத்தியுள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
பதிவான நிகழ்ச்சியை மீண்டும் ஆராய்ந்த பிபிஸிஇறுதியில்தனது தவற்றினை முழுமையாக ஒப்புக் கொண்டுமுஹம்மத்அப்துல் பாரி அவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.இச்செய்திபிபிஸி தளத்திலும் வெளியாகியுள்ளது.
சம்பவத்துக்குக் காரணமான கேள்வி நேரம்(Question Time)நிகழ்ச்சியினைக் கடந்த மார்ச் 12, 2009 இல் பிபிஸிபதிவுசெய்தது. அதில், பிரிட்டிஷ் படை வீரர்களை எதிர்த்துஈராக்மற்றும் பல்வேறு நாடுகளில் நடந்து வரும்போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள் பற்றிய நிகழ்வு தொடர்பாக ஒருபார்வையாளர்எழுப்பிய கேள்விக்கு முஹம்மத் அப்துல் பாரிஅவர்கள் பதில்அளித்திருந்தார்.
பிரிட்டிஷ் படைவீரர்களுக்கு எதிராக நடக்கும்இத்தகையகிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் படவேண்டுமா?என்று பார்வையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விக்கு முஹம்மத் பாரி பதில் சொல்லமுற்படுகையில்குறுக்கிட்ட நடுவர் குழு, "பிரிட்டன் உட்படபல்வேறு நாடுகளில்பிரிட்டிஷ் படைவீரர்களை எதிர்த்துஇத்தகையப் போராட்டங்கள்பல நடந்தும் அதனைக் கண்டனம்செய்யத் தவறியதால்முஹம்மத் பாரி இதனை ஆதரிக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்!" என்று கருத்துத் தெரிவித்தது.
அத்துடன் நில்லாமல் "பிரிட்டிஷ் படைவீரர்கள் மீதுநிகழும்இத்தகைய கடத்தல் மற்றும் கொலைகளை முஹம்மத்பாரிஅவர்கள், ஏகமனதாக ஆதரிக்கிறார்" என்றும் "இதுவேஇஸ்லாம்கூறும் வழியாகும்!" என்றும் சர்வதேச அளவில்நிகழ்ச்சியைக்காணும் பார்வையாளர்கள் அதிரும் வண்ணம் நடுவர்குழுஅந்நிகழ்ச்சியில் பழியும் சுமத்தியது. பிபிஸி நடுவர்குழுவின்இத்தகைய அவதூறான பேச்சில் மறைமுகமாகபிரிட்டனின்முஸ்லிம் பேரவையைக் குறிவைத்துத்தாக்கியிருந்ததுவெளிப்பட்டுள்ளது.
பிபிஸியின் மோசமான இந்தச் செயல்பாட்டைஎதிர்த்துமுஹம்மத் அப்துல் பாரி அவர்கள் நீதிமன்றத்தில்தொடர்ந்தவழக்கினைத் தொடர்ந்து, பிபிஸி தன்னுடையஇஸ்லாமியவிரோத அவதூறுக்கு மன்னிப்பு கேட்டுவருந்தியதோடுமுஹம்மத் அப்துல் பாரி அவர்களுக்கு 45,000பிரிட்டிஷ்பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்கவும் சம்மதித்துள்ளது.இந்தத்தொகையினைத் தாம் அறக்கட்டளைகளுக்கு தர்மமாகவழங்கிவிடப் போவதாக முஹம்மத் பாரி அவர்கள்தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment