மதுரை: நெல்லை நாங்குனேரி அருகே கணவரை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக மனைவி குற்றம் சாட்டும் வழக்கின், தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, இன்ஸ்பெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. நாங்குனேரி அருகே ஏர்வாடியைசேர்ந்த ஹசன்ரபீக் மனைவி மரியம் பீவீ தாக்கல் செய்த மனு:
என் கணவர் சமையல் தொழில் செய்து வந்தார். மே 28ல் அவரை முத்து காசிம் என்பவர் சூரங்குடியிலுள்ள ஆறுமுகம் வீட்டில் சமைக்க அழைத்து சென்றார். பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஜூன் 1ல் அடையாளம் தெரியாத ஒருவரது பிணத்தை போலீசார் கைப்பற்றியதாக அறிந்தேன். அதை பார்த்தபோது என் கணவர் தான் என தெரிந்தது. என் கணவர் இறப்பில் மர்மம் உள்ளது. சம்பள பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் என் கணவரை முத்துகாசிம், ஆறுமுகம் ஆகியோர் கிணற்றில் தள்ளி கொலை செய்திருக்கலாம். இதுகுறித்து நாங்குனேரி போலீசார் ஏற்கனவே பதிவு செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப் பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஜின்னா, சீமான் ஜான் ஆஜராயினர். அரசு தரப்பில் முருகன் ஆஜரானார். நீதிபதி ஜி.எம்.அக்பர்அலி, ""ஹசன்ரபீக் இறந்த வழக்கில் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி,'' இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment