டெல்லி: இலங்கையில் நடந்த போர் காரணமாக இதுவரை மொத்தம் 3,02,543 தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மக்கான் கூறுகையல்,
இலங்கையிலிருந்து 24.07.1983 முதல் 02.07.09 வரை நான்கு கட்டங்களாக மொத்தம் 3,02,543 தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். அவர்களது வருகை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதுவரை சுமார் 1 லட்சம் அகதிகள் அவர்களுடைய சம்மதத்துடன் இலங்கைக்கு இரண்டு கட்டங்களாக மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
சம உரிமைக்கு முயற்சி..
இந் நிலையில் இலங்கை பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் ஆலோசனை நடத்தினார். அப்போது எம்பிக்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு அவர் பதிலளித்தார்.
அவர் கூறுகையி்ல், இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார்.
Friday, July 24, 2009
தமிழகத்தில் 3,02,543 இலங்கை அகதிகள்
User Comments
[ Post Comments ]
[ Read All Comments ]
பதிவு செய்தது: 23 Jul 2009 1:59 pm
தமிழனோட தமிழன கொஞ்சம் தமிழ் நட்டு தமிழனும் வாங்கடா.அப்பா தான் தமிழன் பெருக முடியும். அப்புறமா ஒன்ன சேர்ந்து இந்தியனுக்கும் சிங்களவனுக்கும் ஆப்பு வைக்கலாம். இலங்கை தமிழர்கள் உதவி பண்ணுவார்கள் தமிழர்கள் குடி ஏற.மக்கள் பலத்தில் நாங்கள் சிங்களவனுக்கு சரி சமண இருக்கணும்.
பதிவு செய்தது: 23 Jul 2009 1:34 pm
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான தீர்வு இலங்கையின் ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட அதிகாரபரவலாக்கல் சிங்கள மத்திய அரசாங்கம் எந்நேரமும் கொடுத்த அதிகாரத்தை திரும்ப பெற்று விடலாம். அத்தோடு தமிழ் பிரதேசங்கள் சிங்கள மயமாவதை தடுக்க முடியாது. மத்திய அரசாங்கம் சிங்கள மக்களை வெளியில் இருந்து கொண்டு வந்து தமிழ் மாநிலத்துக்குள் குடியேற்றி தமிழ் மாநிலத்தை சிங்களமாக மாற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி இருக்கும் போது இந்த இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகாபப்பரவலாக்கல் என்பது ஒரு மாயையே
[ Post Comments ]
[ Read All Comments ]
Subscribe to:
Post Comments (Atom)
E-mail
To the Editor
Print