தீவிரவாதத்தின் பெயரால் காவல்துறை ஒரு குடும்பத்தை தொடர்ந்து அலைக்கழித்து இன்னலுக்கு ஆளாக்குவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பின் பெயரிலும், விசாரணை என்ற பெயரிலும் கேரள மாநிலம் ஈராட்டுப்பேட்டையைச் சார்ந்த ஓய்வுப்பெற்ற ஆசிரியரான அப்துல்கரீம் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் நிரந்தரமாக காவல்துறையினரால் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
2007 ஆம் ஆண்டு கேரள மாநிலத்திலிலுள்ள ஆலுவாவின் அருகிலிலுள்ள பானாயிக்குளத்தில் நடந்த சுதந்திரதின கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தோடு தொடர்புப்படுத்தி கைதுச்செய்ததோடு காவல்துறையின் தொந்தரவுகளும் ஆரம்பித்தது. கைதுச்செய்யப்பட்டவர்களில் அப்துல்கரீமின் மகன் ஷாதுலியும் மகளின் கணவர் ராஸிக்கும் உட்பட்டிருந்தனர். பின்னர் உயர்நீதிமன்றம் இவர்களை பிணையில் விட்டது. இதற்குபிறகு மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வைத்து மீண்டும் ஷாதுலியையும்,அவருடைய சகோதரன் ஷிபிலியையும் சிமியுடன் தொடர்புப்படுத்தி கைதுச்செய்ததோடு சில ஊடகங்கள் இவர்களின் குடும்பத்தை தீவிரவாதத்தின் மையமாக சித்தரித்தன. இந்தியாவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக இருந்த ஷிபிலியை சந்திக்க நண்பனுடன் சென்ற ஷாதுலியை அங்குவைத்து காவல்துறை கைதுச்செய்தது. ஷாதுலி என்ஞ்சினியரிங் முடித்துவிட்டு வெப் டிசைனராக வேலைப்பார்த்துக்கொண்டிருந்தவர். இவருக்கெதிராக 38 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில் 37 வழக்குகளும் குஜராத்திலிருந்து என்று அவருடைய தந்தை அப்துல் கரீம் சுட்டிக்காட்டுகிறார். ஷாதுலியைக்கைதுச்செய்யப்பட்ட பின்பு நடந்த குண்டுவெடிப்புகளின் பெயரில்தான் இத்தனை வழக்குகளும். இவருடைய கைதிற்குப்பின் பலமுறை வீட்டை காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.வீட்டிலிருந்த 3 கம்பியூட்டர்களும், ஒரு லேப்டாப்பையும் எடுத்துச்சென்றுள்ளது காவல்துறை. காவல் நிலையம் சென்று கேட்டபொழுது அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக கூறியுள்ளது காவல்துறை.
இந்தியாவின் எந்த பகுதியில் குண்டுவெடிப்புகள் நடந்தாலும் காவல்நிலையம் சென்று போலீஸ் விசாரணக்கு ஆளாகவேண்டிய துர்பாக்கியமான சூழல் இக்குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.பிள்ளைகளின் ஜாமீனுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளின் ஏறி இறங்கும் அப்துல் கரீமை சில நாட்களுகு முன்பு எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக காவல்துறையினர் தேடி வந்தது இரவு 2 மணிக்கு. காவல்துறையும் ஊடகங்களும் பரப்பிய கட்டுக்கதைகள் அப்துல்கரீமின் மகள் பவ்ஸினாவையும் விட்டுவிடவில்லை. ஐ.பி.எம் என்ற சர்வதேசநிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக இருந்த இவரைப்பற்றி ஒரு பிரபல மலையாளப்பத்திரிகை தீவிரவாதத்தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டி அவதூறுச்செய்தியை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து கேரள காவல்துறை விசாரணை ஆரம்பித்தது. நிரந்தமான போலீஸின் அலைக்கழிப்பால் மகளுக்கு அவ்வேலையை கைவிட நேர்ந்ததாக அப்துல் கரீம் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment