
இதற்கு முன் வேறு எந்த இந்திப் படத்துக்கும் இல்லாத அளவு பரபரவென முன்பதிவு நடக்கிறது கமல்ஹாசன் மகள் ஸ்ருதி நடித்த லக் படத்துக்கு.
ஸ்ருதி - இம்ரான் கான் நடித்துள்ள இந்தப்படத்தை சத்யம் சினிமாஸ் சென்னையில் விநியோகிக்கிறது. ஆறு பெரிய திரையரங்குகளில் இந்தப் படம் நாளை வெளியாகிறது.
சில திரையரங்குகளில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக விநியோகஸ்தர்கள் சந்தோஷத்துடன் தெரிவித்தனர்.
கமல் ரசிகர்கள் பெருமளவு ஆர்வத்துடன் இந்தப் படத்துக்கு முன்பதிவு செய்துள்ளார்களாம். மும்பையிலும் இப்படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
படத்தின் முன்னோட்டக் காட்சி சில தினங்களுக்கு முன் சென்னை மற்றும் மும்பையில் நடந்தது. மும்பையில் படம்பார்த்த பெரும்பாலான நட்சத்திரங்கள், 'அட நம்ம சரிகா பொண்ணா இது... கலக்கிடுச்சு' என பாராட்டித் தள்ளினார்களாம்.
சென்னையில் இந்தப் படம் பார்த்த திரையுலகினர், படம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகப் பாராட்டினர்

No comments:
Post a Comment