உடல் அழகை பாதுகாக்க குழந்தை பெறமாட்டேன் என்று கணவரிடம் ஐஸ்வர்யா ராய் நிபந்தனை விதித்ததாக சமீப காலமாக பரபரப்பாக செய்தி வெளியாகி வருகிறது. இதை ஐஸ்வர்யா ராய் கடுமையாக மறுத்துள்ளார்.
"தனது அழகான ஒல்லி தேகத்தை தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், கணவர் அபிஷேக் பச்சனிடம், குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது", என நிபந்தனை விதித்ததாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது.
ஏற்கென இதுபோன்ற செய்திகள் வெளியானபோது அமைதி காத்த ஐஸ், இந்த முறை கொதித்துப் போய்விட்டார்.
இதுகுறித்து உடனடியாக தனது சார்பில் வழக்கறிஞர் மூலம் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராய். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"ஐஸ்வர்யாராய் பற்றியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஊடகங்களில் வெளியான அடிப்படை செய்திகள் ஆதாரமற்றவை. பொய்யானவை. பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் இது போன்ற அறிக்கைகளுக்கு நிச்சயம் பதிலடி தருவோம்.
இதைப் புரிந்து கொண்டு இனியும், இது போன்ற தவறுகள் நடக்காமல் சம்பந்தப்பட்டவர்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். மாறாக ஏதாவது துண்டு செய்தியோ, கட்டுரைகளோ அவரைப் பற்றி அவதூறாக வெளியிட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் ஒரு தென்னை மரத்தை திருமணம் செய்து கொண்டிருப்பதாக செய்தி வெளி வந்தது. அப்போது அதுபற்றி அவர் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து விட்டார். இதை பலவீனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
தனது திருமணத்துக்கு பின்னும் அவர் சினிமாவில் நடித்து வருகிறார். அவர் ஒரு நாடறிந்த நட்சத்திரம் என்பதோடு மட்டுமின்றி நமது கலாசாரப்படி ஒரு மகளாகவும், மனைவியாகவும், மருமகளாவும் இருந்து நமது சமூகத்தின் மதிப்புகளை பின்பற்றி வருகிறார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது", என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment